ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நாம் பல பாடங்கள் கற்றுள்ளோம். தமிழா ! இது வரை நாம் யார் ? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தோம். ஆனால் இன்று நாம் யார் என்ற கேள்விக்கு உலகமே நமக்கு பதில் அளித்து விட்டது.
உலகை திரும்பிப் பார்க்க வைத்த தமிழக இளைஞர்கள் ஓர் அகிம்சையான போராட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
உலக மக்களுக்கும், இந்திய தேசத்திற்கும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
நிச்சையமாக இது நாளை இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டாக தான் விளங்க போகிறது, இதேபோன்ற ஒரு போராட்டம் இனி இந்தியாவில் அமைதி வழியில் நடக்குமா என்பதை கனவிலும் கூட நினைத்து பார்க்க முடியாது.
இந்த தொகுப்பை படிப்பவர்கள் நன்றாக சிந்தியுங்கள்...
1. திரையில் தோன்றும் பொய்யான நடிகர்கள் பின்பு சென்றது தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
2. அரசியல் என்று தலைவர்களின் பொய்யான சூளுரைகளை கேட்டது தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
3. தொலைகாட்சிகள் நம்மை எதற்காக பயன்படுத்தினர்கள்.
4. தமிழனின் பொருள்களை வாங்காமல் அன்னிய நாட்டின் பொருள்களை வாங்கியது சரியா?
5. தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் யார் நமக்காக வந்தார்கள் என்று புரிய வைத்துள்ளர்கள்.
6. இந்திய நாட்டில் தமிழனின் நிலை என்ன என்று தமிழனுக்கு தெளிவாக புரிய வைத்துள்ளார்கள் .
7. இன்று ஒரு விஷயத்தை அலட்சியம் செய்தால் அதன் விளைவு பிற்காலத்தில் எப்படி அமையும் என்றும் புரிய வைத்துள்ளார்கள்.
8. தமிழன் என்றால் யார் ? அவனால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக நினைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த போராட்டம் செருப்படி கொடுத்தாற் போல் இருந்திருக்கும்.
9. வளரும் சந்ததியர்களுக்கு நாம் முதலில் என்ன கற்று தரவேண்டும் என்று இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
10. தமிழ் மொழியினை அலட்சியம் செய்ததன் விளைவு தான் இன்று தமிழ் கலாச்சாரத்தினை அழிப்பதற்கான காரணம் என்று புரிய வைத்துள்ளனர். .
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.