கொழும்பு, கோட்டை பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தின் பொது கழிப்பறை பயன்படுத்துவதற்காக அறிவிடப்படும் கட்டணத்தின் காரணமாக இன்று மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
கழிப்பறை பயன்படுத்திய பெண் ஒருவர் கட்டணமாக 10 ரூபாய் வழங்கியுள்ள போதிலும் கட்டணம் 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் சூடான வாக்குவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்களும் இவருக்கு இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கழிப்பறை முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொள்ளகின்ற தேசிய இடைக்கால சபையிடம் வினவிய போது, கழிப்பறை கட்டணம் எதுவும் அதிரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான கட்டம் 10 ரூபாய் எனவும், அங்குள்ள ஊழியர் அதிக கட்டணத்தை அறிவிடுவதாக இதற்கு முன்னரும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இன்று ஏற்பட்ட மோதலினால் மீண்டும் இது தொடர்பில் ஆராய்வதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.