வாகனங்களுக்கு தீ வைப்பு; திருவல்லிக்கேணியில் கொழுந்துவிட்டு எரியும் போராட்டம் !

சென்னை மெரீனா போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி விரட்டினர். இதனையடுத்து, கடலில் இறங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக படகுகள் மூலம் பட்டினப்பாக்கம் மக்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.



இந்நிலையில், மெரீனாவில் துரத்தப்பட்ட போராட்டகாரர்கள் மீண்டும் மெரீனாவில் நுழைய முயன்றனர். அவர்களை கண்ணீர் புகைகுண்டு வீசி மாணவர்களை களைத்துவருகின்றனர்.

இதனையடுத்து, போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, தற்போது திருவல்லலிக்கேணி சாலையில் போராட்ட இளைஞர்கள் ஆத்திரமடைந்து ஐஸ் அவுஸ் பகுதியிலுள்ள வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர்.

இதனால் இளைஞர்களின் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவ ஆரம்பித்துள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.