ஜல்லிக்கட்டு மீதான பீட்டா தடை! மாணவர்களின் அதிரடி அறிவிப்பு : வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை!

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க, கலாச்சாரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டில் மாடுகளை துன்புறுத்துவதாக பொய் குற்றச்சாட்டுகளை கூறி தடை செய்தது வெளிநாட்டு அமைப்பான பீட்டா. ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்ட களத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கும் எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.



இந்நிலையில் பீட்டா அமைப்பிற்கு எதிராக தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளிலும் உள்ள வெளிநாட்டு குளிர் பானங்களை தடை செய்ய, ஒவ்வொரு கடையாக ஏறி மாணவர்கள் வெளிநாட்டு குளிர் பானங்களை அகற்றி வருகின்றனர்.
முதல்கட்டமாக சென்னையில் மாணவர்கள் தீவிரமாக களம் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது காட்டுத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவ ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது பீட்டா எம் தமிழக இளைஞனின் கால்களை நக்கும் !!! என்று கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.