அலங்காநல்லூரில் 100 மணி நேரத்தைத் தாண்டியது ஜல்லிக்கட்டு போராட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100 மணி நேரத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும். பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர வரைவு சட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100மணி நேரங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் திறக்காமல் வீடுவாசல் திரும்ப மாட்டோம் என அலங்காநல்லூர் மக்கள் உறுதியுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.