ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய மாணவன் விபத்தில் பலி!



கிளிநொச்சியில் நேற்றுமாலை நடந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிய ஊடக மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக நேற்றுமாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.






இந்தப் போராட்டத்தில் பங்கேற்று விட்டு, உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுப்பிரமணியம் முரளிதரன் என்ற ஊடகத்துறை மாணவன், பாரஊர்தி மோதி உயிரிழந்துள்ளார். புளியம்பொக்கணையில் நேற்றிரவு 7.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் மரணமான சுப்பிரமணியம் முரளிதரன், யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கைநெறியை கடந்த ஆண்டிலேயே நிறைவு செய்திருந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.