குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் பிரச்சனை மற்றும் மூட்டு வலி பிரச்சனைகள் ஆட்கொள்கின்றன.
இதனால், உணவு விடயத்தில் தான் முதலில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச், சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமை மற்றும் கேழ்வரகு போன்ற தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதோடு, நாம் அதிகமாக பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் பனஞ்கருப்பட்டி, வெல்லம் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருந்தால், தினம் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு அல்லது, வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அப்படியே நோயை அழித்து விடும்.
மேலும், தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோய் தவிர மற்ற நோய்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும்.
அத்துடன், ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.