பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டில் தாக்கப்பட்டவர்களை கௌரவ படுத்த இருண்ட Eiffel கோபுரம்!

கல்கரி அல்பேர்ட்டாவிலிருந்து பரிஸ் வரையும் நகரங்கள் ஞாயிற்றுகிழமை இரவின் கொடிய துப்பாக்கிசூட்டு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு நன்கு அறியப்பட்ட அடையாள சின்னங்களை திங்கள்கிழமை மாலை உபயோகப்படுத்தினர்.



பரிசில் Eiffel Tower தங்கள் உயிர்களை பறி கொடுத்த மனிதர்களை கௌரவப்படுத்தும் பொருட்டு நள்ளிரவிற்கு பின்னர் இருளில் மூழ்கியதென பரிஸ் செய்தி அனுப்பியுள்ளது. புகழ்மிக்க கோபுரத்தின் ருவிட்டர் கணக்கு அதன் 164,000 பின்பற்றுபவர்களுடன் பின் குறிப்பிட்ட தகவலையும் அனுப்பியுள்ளது. 

கியுபெக் மற்றும் கனடிய மக்களிற்கு எனது ஆதரவை வழங்கும் பொருட்டு எனது வெளிச்சங்களை நள்ளிரவிற்கு பின்னர் நான் அணைப்பேன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



2015 நவம்பரில் பரிசிஸ் ஏற்பட்ட பேரழிவு தாக்குதலில் 130 பேர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்று கணக்கானோர் காயமடைந்த சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கியுபெக் நகரம்  பிரான்சின் மூவர்ண கொடியின் நிறங்களை தனது கட்டிடங்களில் ஒளிர விட்டதற்காக இந்த சக்கி வாய்ந்த அஞ்சலி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னர் Langevin Bridge என அறியப்பட்டதும் கல்கரியில் அமைந்துள்ளதுமான வரலாற்று சிறப்பு மிக்க நல்லிணக்க பாலம் கியுபெக் மாகாணத்தின் தேசிய கொடி நிறங்களான நீலம் மற்றும் வெள்ளை நிற வெளிச்சங்களை ஏற்றி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி அல்பேர்ட்டா எட்மன்டன் நகரம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மரியாதை செலுத்தும் பொருட்டு கியுபெக் கொடியின் நீல மற்றும் வெள்ளை நிற வெளிச்சத்தை சஸ்கற்சுவான் நதி High Level பாலத்தில் ஏற்றியது. 

கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவில் சிற்றி ஹாலின் முன்னால் உள்ள அதன் பிரபல்யமான ரொறொன்ரோ அடையாளத்தின் வண்ணமயமான விளக்குகள் தாக்கப்பட்டவர்களை கௌரவப்படுத்தும் பொருட்டு மங்கலாகின. 

ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி இத்தகவலை வெளியிட்டார். ரொறொன்ரோவின் உத்தியோக பூர்வ கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிப்பட்டன.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.