21 வயதான ஜார்கண்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு வேலை தருவதாக கூறி ஆரிஃப் என்பவர் எழுத்து தேர்வு இருக்கிறது என சொல்லி வெளியே அழைத்துள்ளார். இதனையடுத்து அவரை காரில் கடத்திய ஆரிஃப் அவனது கூட்டாளிகளான மெஹர்பான், விஜய் ஆகியோருடன் அந்த பெண்ணை காரில் வைத்தே பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை இரவு 11 மணிக்கு காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். சாலையில் விழுந்த அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான விவரங்களை வெளியிடாத போலீசார், விசாரணை தொடங்கிய பின்னர் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். இந்த குற்றசெயலில் ஈடுபட்ட மூன்று பேரும் 22, 23, 24 வயதுடையவர்கள்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.