இளைஞர்களின் இத்தகைய செயல்பாடு மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இவ்வருடம் நம் தமிழ்நாடு இந்தியாவே எதிர்நோக்கும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க போகிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு வரும் இத்தேர்தலில் வெற்றி பெற போவது ஆளுங்கட்சியா அல்லது எதிர்கட்சியா? என்பதைவிட இளைஞர்கள் மூலம் மாற்றம் வரவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக கூறப்படுகிறது.
தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களோடு சேர்ந்து ஆலோசனை செய்து பிரச்சனைகளை ஆராய்ந்து, அதற்கு தீர்வு சொல்லக் கூடிய ஒரு இளைஞரை தேர்வு செய்து தேர்தலில் சுயேட்சையாக நிற்க வைக்கலாம் என்று இளைஞர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் சுயேட்சையாக போட்டியிடுவதாக பரவி வரும் தகவல்களால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.