யாருமின்றி வீதியில் பெற்றோர்களால் விடபட்ட சிறுவன் ! - வாழ்வளித்த பெண்மணி !

நைஜிரியாவில் சாத்தான் குழந்தை என கைவிடப்பட்ட சிறுவன் நிலையில் டென்மார்க் சமூக ஆர்வலர் ஒருவரால் மீட்கப்பட்டு சத்தான குழந்தையாக மாறி உள்ளது.

நைஜிரியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஹோப் சாத்தானின் சந்ததி எனக் கூறி பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் குற்றுயிராய் டென்மார்க் சமூக ஆர்வலர் ஒருவரால் மீட்கப்பட்டார்.


கடந்த 2016 ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்தவரும், தற்போது ஆப்ரிக்காவில் வசித்து வரும் அன்ஜா ரிங்ரின் லோவன் என்பவரது மீட்புக் குழு அங்கு சென்றுள்ளது. அப்போது பரிதாப நிலையில் இருந்த குழந்தை ஹோப்பைக் கண்ட லோவன் கையில் சாப்பிடுவதற்கு ஒரு பிஸ்கட் கொடுத்து விட்டு, அதன் பின்னர் தன்னிடம் இருந்த தண்ணீரை அந்த குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.

குழந்தை ஹோப் மீது பரிதாபம் கொண்ட அவர், சிறுவனின் அந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை அங்கிருந்த மக்களிடம் இருந்து கேட்டறிந்தார். சிறுவனை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க வகை செய்தார். அதில் ஹோப்பிற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இரத்த சிவப்பணுக்கள் ஏற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து தினசரி இரத்தம் மாற்றுதல் என பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை லோவன் தன்னுடைய சமூகவலைத்தில் பதிவேற்றம் செய்தார். ஹோப்பை சமூகவலைத்தளங்களில் கண்ட அனைவரும் மிகவும் அனுதாபப்பட்டனர். அதைத் தொடர்ந்து இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனால் ஹோப்பிற்கு உதவுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கு பணம் அனுப்பப்பட்டன. இந்த வகையில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு பின்னர் ஹோப் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்ட உடன் லோவன்  குழந்தைகளின் தொண்டு நிறுவனமான ஆப்பிரிக்க குழந்தைகள் உதவி கல்வி மற்றும் அபிவிருத்தி மன்றத்தில் சேர்த்து விட்டார்.

தற்போது ஹோப் நல்ல உடல் தகுதி பெற்று பள்ளிக்கு சென்று விட்டான் என்று கூறி புகைப்படத்தை லோவன் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அன்று சாத்தானின் சந்ததி என பெற்றோரால் கைவிடப்பட்ட ஹோப் இன்று உலக மக்கள் உதவியுடன் நல்ல நிலையில் இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்று கூறி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.