ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நோய் தொற்று:
லோக்சபாவில் நேற்று, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர், பாகன் சிங் குலோஸ்தே கூறியதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2015ல், அலைபேசி தொற்று தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது; இதில், ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
81% வாய்ப்பு:
குறிப்பாக மருத்துவமனைகளில், ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்தும் போது, 81 சதவீதம் அளவிற்கு நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. எனவே, அலைபேசியை பயன்படுத்தும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.