பாதுக்கை பிரதேசத்தில் பெண்ணொருவரை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் உதவியுடன் பாதுக்கை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் கடந்த ஒரு மாதகாலமாக சுற்றித்திருந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
க.பொ.த. சாதாரண தரம்வரை கற்றிருக்கும் குறித்த இளம்பெண் 17 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணிடம் தேசிய அடையாள அட்டை அல்லது அவரை அடையாளப்படுத்தும் வகையிலான எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த பெண்ணிடமிருந்து எவ்வித தகவல்களை பெறமுடியவில்லையெனவும், அவர் பேச முடியாதவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பெண்ணை அவிசாவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.