முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெற வேண்டுமா?

உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில்  கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது.


காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர அதாவது மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சுருக்கங்கள் மறையும்.
 
ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து  முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
 
முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை  முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி,  சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.
 
தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர நாளடைவில் முகம் பொலிவு  பெறும்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.