ஜப்பானில் வேலைநேரத்திற்கு அப்பாற்பட்டு அதிக நேரம் பணிபுரிந்ததால், இறந்துபோன ஒரு துரித உணவக மேலாளரின் குடும்பத்திற்கு 4 லட்சம் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
ஜப்பானில் நபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு 'மிஸ்டர் டோனட்' மையங்களை மேலாண்மை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் 100 மணிநேரத்திற்கு மேலாக வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு அவர் அதிக நேரம் கட்டாயமாக பணிபுரிய வேண்டியிருந்துள்ளது.
அதுவே அவரது இறப்புக்கு காரணமானதாக கூறி அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது வாதிட்ட குறித்த டோனட் நிறுவனம்,
குறித்த நபர் அதிக எடையுடையவர் என்றும், இவ்வளவு அதிக நேரம் வேலைநேரத்திற்கு அப்பாற்பட்டு பணிபுரிய அவரை கட்டாயப்படுத்தவில்லை என்றும் வாதிட்டுள்ளது.
ஆனால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், நீண்டநேரம் தீவிரமாக பணிபுரிவதால், ஜப்பானிலுள்ள ஐந்தில் ஒரு பகுதி தொழிலாளர்கள் இறந்துபோகும் ஆபத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய அரசு அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, உயிரிழந்த நபருக்கு இழப்பீடாக 4 லடசம் டொலர் ( இலங்கை மதிப்பில் ரூ.6,01,80,000.00) வழங்க உத்தரவிட்டுள்ளது.
மட்டுமின்றி, வேலைநேரத்தை குறைக்கவும், அதிக விடுமுறைகள் எடுக்கவும் தொழிலாளர்களை தூண்டுவதற்கு, அரசு ஊக்கமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.