ஜியோவுக்கு கடுமையான போட்டிக் கொடுக்க பி.எஸ்.என்.எல் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரூ36-க்கு 1GB என்ற 3G டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல்.
சிறப்புத் திட்டமான, இதன்மூலம் ரூ.291-க்கு 8GB வரை பெறலாம் என்றும், ரூ.78-க்கு 2GB பெறலாம் என்றும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.
இதற்கு 28 நாள்கள் வேலிடிட்டி. மேலும், இது முன்னர் இருந்ததை விட நான்கு மடங்கு கூடுதல் (டேட்டா) என்றும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல்லின் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.
ஜியோவின் நெட் வெர்க் அனைத்து இடங்களிலும் கிடைப்பது. இல்லை ஆனால் பிஎஸ்என்எல் நெட்வெர்க் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் ஆகவே இந்திய மக்களிடையே இனி ஜியோவுக்கு சரிவு வரலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.