அதன்படியோ, வயிற்றைக் கிழித்துப் பார்த்தபோது 10 செ.மீ நீளத்திலிருந்த கட்டியை வெளியே எடுத்தபோது அதில் 3 செ.மீ பாதி வளர்ச்சியடைந்திருந்த மூளையின் பகுதியான செரிபெல்லம் மற்றும் முடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வயிற்றில் கட்டி தோன்றுவது சாதாரணம் என்றாலும், அதில் மூளை போன்ற நுட்பமான அமைப்பு உருவானது எப்படி? என மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர் .
வயிற்றிலுள்ள திசுக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை மத்திய நரம்பு அமைப்பு அடையாளம் கண்டுவிடும் என்றாலும், வயிற்றில் மூளை வளருவது என்பது மிக அரிதானது என அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலை மருத்துவரான ஏஞ்லிக் ரிப்ஸ்மென் தெரிவித்துள்ளார்.
ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணுக்கு நினைவுத்திறன் குறைதல், குழப்பமான எண்ணங்கள் என எவ்வித அறிகுறிகள் காட்டப்படவில்லை என்பது ஆச்சரியமாகவே இருந்துள்ளது. தற்போது, அப்பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு குணமடைந்து வருகிறார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.