2017 - 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017 - 2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில் வேளாண் துறைக்கான வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
* இந்த நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ராபி பருவத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் ஏக்கர் கணக்கு அதிகம்.
* 2017 - 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையில் 60 நாட்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
* இந்த ஆண்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
* அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் வருவாயை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.
* நீர்ப்பாசனத்துக்காக ரூ,40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2019 ஆண்டின் இறுதியில் 50,000 கிராம பஞ்சாயத்துகள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்.
* நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனமாக ரூ.5000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* இயற்கைப் பேரிடர்களின் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைக் காக்க நடவடிக்கை.
* நபார்டு வங்கிக்கான நிதி ரூ.40,000 கோடியாக உயர்வு.
* பால் உற்பத்திக்கான கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி.
* ஒப்பந்த விவசாயம் தொடர்பான மாதிரி சட்டம் உருவாக்கப்பட்டு, மாநில அரசுகளுடன் பகிரப்படும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.