யாழ் பெண்கள் விடுதியில் பாரிய தீ!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் இருக்கும் மாணவிகளை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
விடுதியில் தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒரு மாணவி உறங்கிக்கொண்டிருந்ததாகவும், ஏனைய மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதியை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்ட பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதால் உள் நுழைவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
-அல்மஷூறா நியூஸ்

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.