இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இத ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க...

இன்று பலரும் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் தூக்கமின்மை. இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் இருப்பதால், மறுநாள் முழுவதும் சோர்வுடனேயே இருக்க நேரிடுகிறது.



இதிலிருந்து விடுபட பலரும் தூக்க மாத்திரைகளை எடுக்க முனைவார்கள். ஆனால் இப்படி தூக்க மாத்திரைகளை எடுத்தால், நாளடைவில் அதற்கு அடிமையாகிவிட நேரிடும். அதோடு பக்க விளைவுகளையும் சந்திக்கக்கூடும். ஆனால் இயற்கை வழிகளின் மூலம் தூக்கமின்மைக்கு தீர்வு கண்டால், நல்ல பலன் கிடைப்பதோடு, நிச்சயம் எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.
சரி, இப்போது தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அந்த இயற்கை நிவாரணியை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
தேன் - 1/4 ஸ்பூன்
கல் உப்பு - 1 சிட்டிகை

இம்மருந்தின் விளைவு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள மருந்து கலவை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைத்து, தூக்கமின்மையைப் போக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு இரு வழிகளில் நிவாரணியைத் தயாரிக்கலாம்.

வழி #1

ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து, இரவில் படுக்கும் முன் உட்கொண்டு, நீரைக் குடிக்க வேண்டும்.

வழி #2

தேங்காய் எண்ணெய் மற்றும் தேனை தனித்தனியாக உட்கொண்டு, நீரைக் குடிக்க வேண்டும். பின் ஒரு கல் உப்பை வாயில் போட்டு சாப்பிட்டு, நீரைப் பருக வேண்டும்.

தேங்காய் எண்ணெயின் நன்மைகள்:

தேங்காய் எண்ணெயில் உள்ள அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கும். மேலும் இது தூக்க பிரச்சனைக்கு காரணமான இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

தேனின் நன்மைகள்:

தேன் மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான கல்லீரல் க்ளைகோஜனை தேக்கி வைக்கும். எப்போது கல்லீரல் க்ளைகோஜன் அளவு போதுமானதாக இல்லையோ, அப்போது மன அழுத்த ஹார்மோனின் அளவு அதிகரித்து, தூக்கத்தில் இடையூறை உண்டாக்கும்.

கல் உப்பின் நன்மைகள்:

கல் உப்பு மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்க உதவும். மேலும் இது இரவு முழுவதும் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும். இரத்தத்தில் சோடியத்தின் அளவு சீராக இருந்தால், மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனின் அளவு குறைய ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FACEBOOK PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.