ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் போது சற்று முன் தான் மரணம் அடைந்து விட்டதாக சில விஷமிகள் பதாகைகளில் எழுதி வைத்ததாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த வன்முறை குறித்து விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், போராட்டத்தின் போது சமூக விரோத அமைப்பினர் கூட்டத்தில் ஊடுறுவியதாகவும் அதனால் தான் போராட்டகாரர்களை கலைந்து செல்லும் படி பொலிசார் கூறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போரட்டத்தின் போது ஒசாமா பின்லேடன் படத்துடன் சிலர் வந்ததையும் அவர் ஆதார புகைப்படத்துடன் சட்டசபையில் காண்பித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சற்று முன்னர் ஓ.பி.எஸ் மரணம் என்ற பேனர் பதாகையை சிலர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வைத்திருந்ததாகவும் ஆதார புகைப்படத்துடன் காட்டி சட்டசபையில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.