பம்பலபிட்டி - சாகர வீதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட சிகரட் மோசடி தொடர்பாக அண்மையில் ஹிரு சி.ஐ.ஏவுக்கு இரகசியமாக தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த வீட்டில் மேலும் பல சட்டவிரோத மோசடி இடம்பெறுவது ஹிரு சி.ஐ.ஏவிற்கு தெரியவந்தது.
கலால் திடீர் சோதனை பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து இந்த சட்டவிரோத மோசடி முற்றுகைக்காக ஆரம்பகட்ட திட்டம் தீட்டப்பட்டது இதன்படி ஆகும்.
கலால் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எல்.கே.ஜி குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மேல் மாகாண உதவி பணிப்பாளர் தயாரத்னவின் தலைமையில் இன்று இந்த முற்றுகை இடம்பெற்றது.
இதன்போது குறித்த வீட்டில் இருந்த சீன பெண்ணொருவர் வீட்டின் கதவை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பின்னர் வீட்டை சோதனை செய்த போது சட்டவிரோத சிகரட்டுக்கள், ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வல்லப்பட்டை தொகையுடன் மேலும் பல பொருட்கள் கைற்றப்பட்டுள்ளன.
இந்த மோசடியுடன் தொடர்புடைய குறித்த சீன பெண், கலால் திடீர் சோதனை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.