வேகமாக பகிருங்கள்: சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் முக்கிய உணவுகள் !

நீரிழிவு மரபணு மூலமும் பரம்பரையில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கை முறை மாற்றம் மூலமும் வருகிறது.
நமது வாழ்க்கை முறை மாற்றம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,மன மற்றும் உடல் ரீதியான உடற்பயிற்சியின்மை,அதிக அழுத்தம் ஆகிய காரணங்களாலும் இந்த நீரிழிவு ஏற்படுகிறது. இது நாட்பட்ட நோய் ஆகும்.




இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்ட்டி-டியாபெடிக் எடுக்க வேண்டும்.அதுவும் நீண்ட நாட்களுக்கு எடுக்க வேண்டும்.

வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருள்கள் இயற்கையாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்கிறது.
ஆனால் அதற்கு முன்பு மருத்துவரை கலந்தாலோசித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை எடுக்கவும் ஏனெனில் சில ஆரோக்கிய சிக்கல்களை தவிர்ப்பதற்கு.

1. பாகற்க்காய் :
மருத்துவ குணம் நிறைந்த காய் இது.இதில் இன்சுலின் பாலிபெப்டைடு-பி அதிகமாக உள்ளது.இந்த காயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக் கூடிய உள்ளது.பாகற்காயில் கேரட்டின் மற்றும் என்ற 2 வகை சிறந்த குணம் உள்ளது.இது சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பின் சர்க்கரை அளவை குறைக்கிறது.
பயன்படுத்தும் முறை:
வாரத்திற்கு ஒரு முறை பாகற்காயை குழம்பு வைத்து உண்ணலாம்.பாகற்காயை நறுக்கி,நடுவில் உள்ள விதையை அகற்றவும்.நறுக்கிய காயை மிக்ஸியில் அரைத்து,சாறைப் பிழிந்து வெறும் வயிற்றில் 1 டம்ளர் சாறை அருந்தவும்.

2. வெந்தயம்:
வெந்தயம் பல சிறந்த மருத்துவ குணம் கொண்ட,சமையலறையில் உபயோகிக்கும் இந்திய மூலிகை வகையைச் சேர்ந்தது.இது நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க,குளுக்கோஸ் அளவை சீராக்க,ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் இன்சுலினில் குளுக்கோஸ் அளவை தூண்ட பயன்படுகிறது. 

3.மா இலை:
நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் சிறந்த பண்பு மா இலையில் உள்ளது.
பயன்படுத்தும் முறை:
மா இலையை கழுவி,சூரிய ஒளியில் காய வைத்து காய்ந்த இலையை அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.இந்த பொடியை காலை மற்றும் இரவு நீரில் கலந்து தினமும் அருந்தவும்.நீரில் மா இலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து இரவு முழுவதும் வைத்து ,காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.

4.நெல்லிக்காய்:
நெல்லிக்காயில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது.இது உடலில் குளுக்கோஸ்-ன் அளவை சரிசமமாக வைக்கிறது.
பயன்படுத்தும் முறை:
2-3 நெல்லிக்காயின் விதையை நீக்கி விட்டு,அரைத்து அதன் சாறை பிழிந்து கொள்ளவும்.2-3 டேபிள் ஸ்பூன் சாறை ஒரு கப் நீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

5.முருங்கைக்காய்(அ)முருங்கை இலை:
முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை சிறந்த மருத்துவ குணம் கொண்டது.இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது மற்றும் உடலின் சக்தியைத் தூண்டுகிறது.முருங்கை இலை ஊட்டச்சத்து நிறைந்தது.இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.முருங்கை இலையில் அதிக ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி உள்ளது.
பயன்படுத்தும் முறை:
தினமும் 50 கிராம் முருங்கை இலையை உணவில் சேர்க்க வேண்டும்.இது சுவைக்காக மட்டுமின்றி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.முருங்கை இலையை பொரித்து (அ) வேக வைத்து உண்ணலாம். 

6.சூரிய ஒளி:
வைட்டமின்-டி குறைபாடு இருப்பின் இது இன்சுலின் சுரப்பையும்,நீரிழிவையும் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.வைட்டமின்-டி குறைவாக இருந்தால் type-2 நீரிழிவு ஏற்படுகிறது.
வைட்டமின்-டி எளிதாக கிடைக்க செய்யும் முறை:
வைட்டமின்-டி குறைபாடு ஏற்படாமலிருக்க தினமும் உடலில் சூரிய ஒளி படும்படி 30 நிமிடம் நிற்க வேண்டும்.தினமும் உணவில் வைட்டமின்-டி அதிகம் உள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு,சோயா பால்,சீஸ்,தயிர் மற்றும் தானியங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும்.

7.நீர்:
நீரிழிவு உள்ளவர்களுக்கு உடலில் நீர் பற்றாக்குறை அதிகம் ஏற்படுகிறது.உடலில் உள்ள குளுக்கோஸ் ஆனது சிறுநீராக வெளியேற்றப்படும்.இதற்கு நிறைய நீர் தேவைப்படும்.உடம்பில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்க நிறைய நீர் அருந்த வேண்டும். அதிக தாகம் எடுப்பது நீரிழிவு-க்கு ஒரு அறிகுறி ஆகும்.
பயன்பெறும் முறை:
தினமும் 2.5 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.


பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FACEBOOK PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.