உயிருக்கு போராடும் மக்களுக்கு பிரதமர் கூறிய புதிய தகவல்..! காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்..!

காணாமல் போன உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா மக்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுபவர்களில் பலர் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் எம்முடன் கலந்துரையாடினார்.
பொலிஸ்மா அதிபரும் தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இலங்கையில் இருப்பவர்கள் தொடர்பில் தெரிந்த தகவல்களை தர முடியும், ஆனால் நாட்டில் இல்லாதவர்கள் தொடர்பில் எதுவும் செய்யமுடியாது எனவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் சுவாமிநாதன் வவுனியா செல்லவுள்ளார்.
சட்டரீதியாக வெளிநாடு சென்றதற்கான தகவல்கள் எம்மிடம் இல்லை. பொலிஸார் தனக்கு தெரிந்த தகவல்களை வெளியிடுவதாக கூறியிருக்கின்றார்கள்.
தமது உறவுகள் வெளிநாடு சென்றிக்கலாம் என்ற நம்பிக்கை காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலருக்கு காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.