தலைவனே இல்லாமல் தானாக வந்து சேர்ந்த கூட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
வழக்கமாக ஒரு போராட்டம் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பது உளவுத்துறையின் முக்கிய கடமை. ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த தகவல்களை சரியாக உளவுத்துறை போலீஸார் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் சட்டம், ஒழுங்கு போலீஸார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்குத் தடை இருப்பதால் வழக்கம் போல இந்த ஆண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றே மத்திய அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருந்தோம். தற்போது எங்கள் ரிப்போர்ட் தவறாகி விட்டது.
உடனடியாக போராட்டங்கள் நடக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அங்குள்ள நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து ரிப்போர்ட் தயாரித்தோம். அதில், மக்களின் எழுச்சிப் போராட்டம், நிச்சயம் பெரியளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று தெரிவித்திருந்தோம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு உடனடியாக சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக பெரியளவில் புரட்சி கூட வெடிக்கலாம். அதன்பிறகு மக்கள் சக்தியை தடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறியிருந்தோம்.
எனவே, மத்திய அரசு, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முடிவு, மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தோம். எங்களது அறிக்கையின் முழுவிவரத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதன்பிறகே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்க வேண்டும்!’’ என்று தெரிவித்திருக்கிறார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.