தினமும் ஆரஞ்சு ஜூஸை குடிக்கிறீர்களா? இந்த நன்மைகளெல்லாம் உண்டாகும்!

ஆரஞ்சு பழ ஜூஸ் அதிக அளவு முக்கியமான மினரல்களை அளிக்கின்றன. அதோடு அவை இதய நோய்கள், ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. ஆரஞ்சு ஜூசை குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.


சிலர் குளிர் மற்றும் மழைக் காலங்களில் சிட்ரஸ் குறிப்பாக ஆர்ஞ்சு பழங்களை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துவிடும் என்று பயந்து கொள்வார்கள்.
இது முற்றிலும் தவறு. ஜலதோஷம் , நெஞ்சு சளி இருந்தால் மட்டும் அவற்றை சாப்பிடக் கூடாது. மற்றபடி இந்த பருவத்தில்தான் முக்கியமாய் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும்.
அவை சளி காய்ச்சலை உங்களை நெருங்க விடாதபடி நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி பாதுகாப்பு வளையத்தை அளிக்கும்.

இதய நோய்களை தடுக்கும் :

ஹெர்ஸ்பெரிடின் என்ற பொருள் ஆரஞ்சில் உள்ளது. அது இதயத்தில் அடைப்புகளை உண்டாக்காமல் தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கலாம்.

ரத்த கொதிப்பை தடுக்கும் :

ஆரஞ்சில் இருக்கும் அதிக மெக்னீசியம் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். சோடியம் அளவை குறைத்து அதிக ரத்த அழுத்தத்தை நார்மல் அளவிற்கு கொண்டு வரும்.

காயங்களை ஆறச் செய்யும் :

ஆரஞ்சில் இருக்கும் ஃப்ளேவினாய்டு காயங்களையும் உறுப்புகளை இருக்கும் பாதிப்புகளையும் சரி செய்யும். காயங்கள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் :

நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். விட்டமின் சி சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். வெள்ளை அணுக்கள் உற்பத்தியை பெருக்கும்.

அல்சரை குணப்படுத்தும் :

அல்சரினால் குடலில் உண்டாகும் பாதிப்பை குணப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

சிறுநீரகக் கற்களை தடுக்கும் :

தொடர்ந்து ஆர்ஞ்சு ஜூஸ் குடிக்கும்போது, சிறு நீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும். கடினமான உப்புக்களால் உருவாக்கப்படும் இந்த கற்களை ஆர்ஞ்சிலுள்ள அமிலப் பண்பு கரைத்துவிடும் ஆற்றல் கொண்டது.

புற்று நோயை தடுக்கும் :

புற்று நோய்க்கு காரணமான ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்துவிடும். முக்கியமாக குடல், நுரையீரல், வாய்ப்புற்று நோயை தடுக்கும்.

ஆரோக்கியமான சருமம் தரும் :

ஆரஞ்சில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும். இளமையான சருமத்தை பெறவும், முதுமையை தள்ளிப் போடவும் உதவும்.

உடல் எடை :

உடல் எடையை குறையச் செய்யும். அதிக நார்சத்து கொண்ட இந்த ஜூஸ் கொழுப்பை கரைக்கிறது.

ரத்த சோகை :

ரத்த சோகையை குணப்படுத்தும். ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இரும்பு சத்தை உடலில் உறிய விட்டமின் சி தேவை. இது ஆரஞ்சில் உள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.