தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க - ஆபத்து

எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் பலரும் ஹோட்டல் உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் வீட்டு உணவை விட ஹோட்டல் உணவு சுவையாக இருக்கும் என்பதும் ஒரு காரணம், ஆனால் அதன் பின்விளைவுகள் உங்களுக்கு தெரியுமா?



* பெரும்பாலான ஹோட்டல் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் இருக்கும், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் பல்வேறு உபாதைகள் வரக்கூடும்.

* மேலும் அங்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டதாக இருக்காது, இதனை உட்கொள்ளும் போது வயிற்றில் குறிப்பாக குடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும்.

* இதேபோன்று கடைகளின் பயன்படுத்தப்படும் எண்ணெயையும் குறிப்பிடலாம், பலமுறை ஒரே எண்ணெயை பயன்படுத்தினால் அதன் எதிர்மறை விளைவுகள் அதிகம்.

* குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் நலம், ஏனெனில் இறைச்சிகளை நன்றாக சுத்தம் செய்தார்களா என்பது நமக்கு தெரியாது, இதனால் அதிலுள்ள கிருமிகள் முழுமையாக நீங்காமல் நம்மை பாடாய்படுத்திவிடும்.

* மேலும் எண்ணெய்களில் இருக்கும் ட்ரான்ஸ் பேட்டி ஃஆசிட்டுகள் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

- உடல் ஆரோக்கியத்தை விருப்புபவர்கள் ருசியாக இருக்கும் ஓட்டல் உணவுகளை விட ஆரோக்கியம் நிறைந்த வீட்டு உணவுகளை சிறந்தது என்பதை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.


பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FACEBOOK PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.