குடியரசு தினவிழாவை புறக்கணித்த தமிழக மக்கள்: வெறிச்சோடிய மெரினா!

குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரையில் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த விழாவில் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி உற்சாகம் இழந்து காணப்பட்டது.



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீதும் மெரினா அருகே உள்ள மீனவப்பகுதி மக்கள் மீதும் காவல்துறை மூலம் அரசு நடத்திய கொடூரமான தாக்குதலை கண்டித்து மக்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்துள்ளனர்.
 
கடந்த திங்கள் கிழமை மாணவர்கள், இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறை பெண்கள் என்று பாராமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தை கெட்ட கெட்ட வார்த்தையை உபயோகித்தனர்.
 
இந்த கலவரத்தில் ஆட்டோக்கள், வீடுகள், வாகனங்கள் போன்றவற்றிற்கு காவலர்களே தீ வைத்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை அளித்தது. இதனையடுத்து காவல்துறையின் இந்த வன்முறையை கண்டிக்கும் விதமாக குடியரசு தினவிழாவை புறக்கணிக்க இருப்பதாக மக்கள் கூறியிருந்தனர்.
 
இதனையடுத்து இன்று மக்கள் யாரும் மெரினா சென்று குடியரசு தினவிழாவை காணவில்லை. சென்னை மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களிலும் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதனால் பிற மாவட்டங்களிலும் குடியரசு தினவிழாவில் மக்கள் கலந்துகொள்ளவில்லை. குடிமக்கள் இல்லாமல் நடந்த குடியரசு தினவிழாவால் அரசு தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.


பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.