அல் - குரானை மெய்ப்பித்து நிற்கும் கட்டிட கலையும் திகைத்து வியர்ந்து போன ஆராய்ச்சியாளர்களும்


மதீனாவில் இருந்து தபூக் செல்லும் வழியில் 500 கிலோ மீட்டர் தூரத்தில் “மதாயின் ஸாலிஹ்” என்ற கிராமம் உள்ளது. இங்கு 4000 வருடங்களுக்கு முன் (கி.மு 2ஆம் நூற்றாண்டு) பலசாலிகளான தமூத் கூட்டத்தினர் வாழ்ந்ததாகவும் அவர்கள் மலைகளை குடைந்து வீடு கட்டியதாகவும் அல் குர்ஆன் கூறுகிறது.


அதன் சுருக்கம் வருமாறு, அந்த மக்கள் மிகவும் பலசாலிகள், அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். அதனால் கர்வம் படைத்தவர்களாகவும் இருந்தனர். அவர்களிடம் ஸாலிஹ் நபியை அல்லாஹ் தூதுவராக அனுப்பினான். அவரை நபியாக ஏற்க மறுத்து அவரின் போதனைகளையும் அவர்கள் நிரகாரித்தனர்.

மேலும் நபி என்பதற்கு ஆதாரமாக ஒரு அத்தாட்சியை கொண்டு வருமாறு அவர்கள் கேட்டதற்கு இணங்க அல்லாஹ் மலையைப் பிளந்து ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பினான். அல்லாஹ்வின் ஏற்பாட்டில் அந்த மலை அடிவாரத்தில் ஒரு கிணறும் உருவானது. அந்தக் கிணற்றில் இருந்து ஒரு நாளைக்கு ஒட்டகமும் ஒரு நாளைக்கு மக்களும் மாறி மாறி நீர் பெற வேண்டும் என ஸாலிஹ் நபி நிபந்தனை விதித்தனர்.

எனினும் அந்த மக்கள் அந்த அத்தாட்சியை புறக்கணித்து ஒட்டகத்தின் கால் நரம்பை துண்டித்து அதனை கொன்று விட்டனர். எனவே திருந்தாத அந்த மக்களை அல்லாஹ் அளித்து விட்டான்.
(பார்க்க : அல் குர்ஆன் 26:140-160, 11:61-65, 15:80-83)

ஒரு மலை அடிவாரத்தில் மட்டும் சுற்றிவர சுமார் 20 வீடுகள் அமைக்கப் பட்டுள்ளன. அதே போல ஆங்காங்கே தொலைவில் உள்ள பல மலைகளிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. அவற்றின் முகப்புத் தோற்றம் கவர்ச்சியாகவும் மிக நேர்த்தியாகவும் நேற்றுத்தான் கட்டி முடிக்கப் பட்டது போலவும் உள்ளது.
உள்ளே படுக்கை அறைகள், அலமாரிகள், மொட்டை மாடிகள், எனப் பல வசதிகள் உள்ளன. பாலைவன வெய்யில் வெப்பத்தில் இருந்து உள்ளே சென்றால் இதமான குளிர்மை கிடைக்கின்றது. இது தவிர அல் குர்ஆன் குறிப்பிடுகின்ற ஆழமான கிணற்றையும் பார்வை இடலாம்.

உயர்ந்த மலை அடி வாரத்தில் அப்படி ஒரு ஆழமான பெரிய கிணற்றை எந்தவொரு மனிதனும் தோண்டுவது என்பது சாத்தியமே இல்லாத விடயமாகும். ஈமானை அதிகரித்துக் கொள்ள இது நல்லதொரு அத்தாட்சி.
குறிப்பு : சனி தொடக்கம் வியாழன் வரை பார்வைக்காக திறந்து வைக்கப் பட்டுள்ளது.


முக நூலிலிருந்து : அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.