துபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று எரிபொருள் உற்பத்தி !

துபையில் ஆண்டொன்றுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் (14.69 பில்லியன் திர்ஹம்) மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீடுகள், உணவகங்கள் மற்றும்பார்ட்டிகள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவோரால் வீணடிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை அகற்றுவதற்கு மட்டும் பகுதி ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6,000 திர்ஹம் செலவாகின்றன.


எனவே, செலவுக்கு பதில் வரவாக ஆண்டுக்கு 2,000 திர்ஹம் வருமானம் தரக்கூடிய தெருப்பகுதிகளாக மாற்றும் நோக்குடனும், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் சுமார் 27 சதவிகிதம் சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமாக எரிசக்தியை (Bio Fuel) வழங்குவதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2017 மார்ச் மாதத்திற்குள் துபையின் பல பகுதிகளிலும் ஈரப்பதமுள்ள வீணாகும் மற்றும் அழுகும்தன்மையுள்ள உணவுகள் சேகரிக்கப்பட்டு அதிலிருந்து மீத்தேன் வாயு மற்றும் திட மாற்று எரிபொருளையும் தயாரித்து பொதுமக்களிடமே மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளனர். இதற்காக சிறிய அளவிலான உற்பத்தி மையங்கள் துபையின் பல பகுதிகளிலும் துவக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 2017 ஏப்ரல் மாதத்திற்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறலாம் என நம்பப்படும் நிலையில் அவரவர் ஊரின் மீதும் அக்கறையுள்ள தலைவர்கள், உறுப்பினர்கள் இதுபோன்ற பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.