நாசா: 2016WF9 என்ற பெயர் கொண்ட பெரிய சைஸ் விண்கல் ஒன்று பூமி மீது மோதி பூமியை அழிக்கப் போவதாக ஒரு பெரிய்ய வதந்தி கிளம்பி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். இந்த விண்கல்லானது நமது வளிமண்டலத்தை ஊடுறுவி உள்ளே வந்து பூமியை மிகப் பெரிய அளவில் தாக்கி பூமியை சுத்தமாக அழித்து விடும் என்பதுதான் பரவி வரும் செய்தியாகும். ராட்சத அணு குண்டுக்குச் சமமானதாம் இந்த விண்கல்.
ஆனால் நாசா என்ன சொல்கிறது என்றால் இந்த விண்கல் அடுத்த வாரம் நமது சுற்றுப் பாதையை கடந்து செல்லவுள்ளது என்று மட்டுமே கூறியுள்ளது. அதேசமயம், இந்த விண்கல்லால் நமக்கு எந்த சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், பூமியிலிருந்து 32 மில்லியன் மைல் தொலைவில்தான் இது கடந்து செல்லவுள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
இந்த விண்கல்லை வைத்து ஏகப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட ஆரம்பித்து விட்டனர். நாசா உண்மையை மறைத்துப் பேசுவதாக சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர். உண்மையில் இந்த விண்கல்லானது பூமி மீது மோதி அழிக்கப் போவதாக அவர்கள் கூறுகின்றனர். 2.2 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக இந்த விண்கல் உள்ளதாகவும் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து டாக்டர் டியோமின் டமிர் ஜகரோவிச் என்பவர் கூறுகையில், நாசா வாய் கூசாமல் பொய் சொல்கிறது. இந்த விண்கல் நமது பூமியை அழித்து விடும். ராட்சத அணு ஆயுதத்திற்கு இது சமம். மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கடல்கள் கொதித்துக் கொந்தளித்து விடும். சுனாமிகள் உலகை சூறையாடும்.
உண்மையில் நிபுரு என்ற ஒரு கிரகத்திலிருந்துதான் இந்த விண்கல் வந்து கொண்டுள்ளது. இந்த கிரகமானது நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே நம்மை ஒட்டியுள்ளதாகும்.
இந்த கிரகம் மிகப் பெரிய அபாயகரமானதாகும். இதற்கு X கிரகம் என்றும் பெயர் உள்ளது. இதுதான் பல இயற்கை சீற்றங்கள் பூமியில் ஏற்பட காரணமாகும். இதை நாசா வெளியில் சொல்வதே இல்லை.
நிக்கல் தாதுவுடன் கூடிய டைட்டானியம்தான் இந்த விண்கல்லில் உள்ளது. எனவே இது வளி மண்டலத்திற்குள் நுழைந்தாலும் கூட எரிந்து சாம்பலாகாது. அப்படியே உள்ளே வந்து விடும். நிபிரு கிரகத்தால் நமது பூமிக்கு ஒரு நாள் பேராபத்து உண்டு. அதற்கு டீசர் போல இந்த விண்கல்லின் வருகையை நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த விண்கல்லால் எந்த இடத்திற்கு ஆபத்து வரும் என்பது நாசாவுக்குத் தெரியும். ஆனால் அது தெரிவிக்காமல் கமுக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார் டியோமின்.
ஆனால் நாசா விடுத்துள்ள அறிக்கையில், 2016WF9 விண்கல்லின் பாதை சரியாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தப் பாதையில் வந்து கொண்டுள்ளதோ, அதில் மாற்றம் இல்லை. மேலும் விண்கல்லால் பூமிக்கும் எந்த ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.