சொந்த மகளை இரு குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை கைது !

தனது சொந்த 23 வயது மகளுடனான முறைகேடான உறவின் மூலம் அவரை இரு குழந்தைகளுக்குத் தாயாக்கிய 37 வயது தந்தையொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தந்தை 13 வயது சிறுவனாக இருந்த போது 30 வயதான பெண்ணுடனான தகாத தொடர்பின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய மகளுக்கு தந்தையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி தந்தை 2010 ஆம் ஆண்டு தனது மகள் 16 வயது சிறுமியாக இருந்த போது அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தந்தைக்கும் அவரது மகளுக்கும் முதலாவது குழந்தை பிறந்த போது இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதன் போது மகளை விட்டு பிரிந்திருக்க எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த போதும், மீண்டும் மகள் மூலம் பிறிதொரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் எனினும் குறித்த இரண்டாவது குழந்தை 3 மாதங்களில் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் இறந்த குழந்தை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில் அக் குழந்தை சம்பவத்துடன் தொடர்புடைய தந்தைக்கும் அவரது மகளுக்கும் பிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை டனிடின் மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி குறித்த தந்தையினை 6 மாத காலம் சமூக தடுப்புக் காவலிலும் இரு வருட கால தீவிர கண்காணிப்பின் கீழும் வைத்திருக்க உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.