தொடரும் அவலம்..! மத்தியதரை கடலில் மூழ்கி 5 ஆயிரம் அகதிகள் பலி

மத்திய தரைகடல் பகுதியில் சிக்கித்தவித்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலிய கடலோர பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம் மீட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பாதுகாப்பற்ற படகுகள் மூலம் இவர்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்வதன் காரணமாக அகதிகள் பயணிக்கும் படகுகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழ்துள்ளனர். இந்நிலையிலேயே நேற்றைய தினம் மூன்று படகுகளில் வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தாலிய கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் ஸ்பெயின் நாட்டு மனிதநேய பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து இவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குறித்த அகதிகள் பயணித்த படகில் சடலம் ஒன்று காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு மத்திய தரைகடல் பகுதியில் படகு விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்தாயிரம் அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு 3777 ஆக காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.